வாட்ஸ்அப் செயலியில் தொடர்ந்து பல புதிய அம்சங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஸ்டேட்டஸ் அப்டேட் பிரிவில் பல புதிய அம்சங்கள் தற்போது வெளிவந்துள்ளன.
முதலாவதாக, வாட்ஸப் ஸ்டேட்டஸ்சில் வாய்ஸ் ஓவர் செய்தியை வைக்கும் அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டாவதாக, ஸ்டேட்டஸ்களுக்கு எமோஜி மூலம் விரைவாக பதில் அளிக்கும் அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது. மூன்றாவதாக, ஸ்டேட்டஸை யார் யார் பார்க்கலாம் என்பதை மாற்றும் அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது.
இது தவிர, ஸ்டேட்டஸில் இணைக்கப்படும் இணையதள லிங்குகள் குறித்து சிறிய முன்னோட்டம் இடம்பெற உள்ளது. இதனால், அந்த லிங்குகளை எளிமையாக பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதியாக, ஒரு நபர் ஸ்டேட்டஸ் வைக்கும் பொழுது, அவரது ப்ரொபைல் போட்டோவை சுற்றி ஒரு வளையம் இடம்பெறும் எனவும், அதை கிளிக் செய்வதன் மூலம் அவர்களது ஸ்டேட்டஸை பார்க்கும் இணைப்பு வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த வளையம் ஆண்ட்ராய்டு கைபேசிகளில் பச்சை நிறமாகவும், ஐபோன்களில் நீல நிறமாகவும் இடம்பெறவுள்ளது.