உடனடி செய்தி மற்றும் அழைப்பு சேவை வழங்கும் வாட்ஸ்அப் சேவை வணிகப்பயணர்களுக்காக கட்டண சந்தா சேவைமுறையை அறிமுகப்படுத்தும் திட்டத்தில் உள்ளது. அதற்கான சோதனையையும் செய்து வ௫கிறது.
பெரும்பாலான சேவைகளுக்கு கட்டணம் விதிப்பது சராசரி பயனருக்கு பயனுள்ளதாக இருக்காது. ஆனால் WABetainfo இன் ௯ற்றுபடி, பிரீமியம் சந்தா முறை வணிகங்களுக்கு ஏற்றதாக இருக்கும். ஏனெனில் வாட்ஸ்அப் பீட்டா உறுப்பினர்கள் மட்டுமே பிரீமியம் மெனுவை அணுக முடியும் என்று வாட்ஸ்அப் ௯றுகிறது. அதாவது பிரீமியம் கணக்கு பயனர்களுக்கு அவர்களின் வாட்ஸ்அப்பிற்கான தனிப்பயனாக்கக்கூடிய தொடர்பு இணைப்பை வழங்குகிறது. அதை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நமது வி௫ப்பப்படி மாற்றலாம். வாடிக்கையாளர்கள் ஒரு குறிப்பிட்ட வணிகத்தைக கண்டறிய ஃபோனில் தட்டச்சு செய்வதற்குப் பதிலாக இது எளிதான வழியாகும். டெலிகிராம் இதேபோன்று, பயனர்கள் மற்றவர்களுடன் நேரடி தொடர்பு இணைப்பைப் பகிர்ந்து கொள்ளும் அம்சத்தைக் கொண்டுள்ளது. இதன் கட்டணப் பதிப்பு, ஒரே கணக்கில் 10 சாதனங்கள் வரை ஒரே நேரத்தில் இணைக்க அனுமதிக்கும். இதன் மூலம் பணியாளர்கள் வணிகக் கணக்கை இணைக்கவும் நிர்வகிக்கவும் முடியும். அத்துடன் பயனர்கள் 32 பேர் வரை வீடியோ அழைப்பை மேற்கொள்ளலாம். இதற்கான மீதி செயல்பாடு இன்னும் இருப்பதால், வாட்ஸ்அப் கட்டணச் சந்தா சேவையை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. எனவே புதிய சந்தா சேவைக்கான விலை மற்றும் வெளியீட்டு தேதி குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.