மறையும் செய்திகளுக்கு 15 புதிய அவகாசங்கள் கொடுக்கப்படும் - வாட்ஸ்அப் அறிவிப்பு

தற்போது, வாட்ஸ்அப் செயலியில், மறையும் செய்திகளுக்கான கூடுதல் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. 24 மணி நேரம், 7 நாட்கள் மட்டும் 90 நாட்கள் அவகாசங்களில் செய்திகளை மறைய செய்யும் அம்சம் தற்சமயம் செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில், கூடுதலாக, 15 புதிய அவகாசங்களை வழங்க உள்ளதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. மறையும் செய்திகளுக்கு, ஒரு மணி நேரம், 3 மணி நேரம், 6 மணி நேரம், 12 மணி நேரம், 2 நாட்கள், 3 நாட்கள், 4 நாட்கள், […]

தற்போது, வாட்ஸ்அப் செயலியில், மறையும் செய்திகளுக்கான கூடுதல் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. 24 மணி நேரம், 7 நாட்கள் மட்டும் 90 நாட்கள் அவகாசங்களில் செய்திகளை மறைய செய்யும் அம்சம் தற்சமயம் செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில், கூடுதலாக, 15 புதிய அவகாசங்களை வழங்க உள்ளதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மறையும் செய்திகளுக்கு, ஒரு மணி நேரம், 3 மணி நேரம், 6 மணி நேரம், 12 மணி நேரம், 2 நாட்கள், 3 நாட்கள், 4 நாட்கள், 5 நாட்கள், 6 நாட்கள், 14 நாட்கள், 21 நாட்கள், 30 நாட்கள், 60 நாட்கள், 180 நாட்கள் மற்றும் ஒரு வருடம் ஆகிய அவகாசங்கள் புதிதாக கொடுக்கப்பட உள்ளன. இதில், ஒரு மணி நேர அவகாசத்தை மிகவும் ரகசியமான தகவல்களை பரிமாறுவதற்கு பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அம்சங்கள் தொடர்பான ஸ்கிரீன் ஷாட் புகைப்படத்தை வாட்ஸ்அப் வெளியிட்டுள்ளது. இந்த புதிய அம்சங்கள் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் ஆகியவற்றில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், வெளியிடப்படும் தேதி குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu