பேடிஎம் பேமென்ட் பேங்க் செயல்பாடுகளை முழுமையாக நிறுத்த ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் டிஜிட்டல் பணப்புழக்கம் பல மடங்கு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நாடு முழுக்க டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சேவை வழங்குவதில் முன்னணி நிறுவனமான பேடிஎம் நிறுவனத்தின் பேடிஎம் பேமெண்ட் பேங்க் செயல்பாடுகளை முழுமையாக நிறுத்த ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது. ஏடிஎம் நிறுவனம் தொடர்ந்து விதிகளை மீறியதால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு பேடிஎம் பேமெண்ட் பேங்கில் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்கவும் தடை விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பேடிஎம் பேமெண்ட் பேங்கில் பணத்தை போடுவது, பரிவர்த்தனைகளை மேற்கொள்வது, பிரிபெய்ட் சேவைகள், வாலட்டுகள், பாஸ்டாக் உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்த முடியாது. தங்களது அக்கவுண்டில் உள்ள பணத்தை எடுத்துக் கொள்ளலாம். மேலும் பாஸ்டாக், சேமிப்பு அக்கவுண்ட், நடப்பு அக்கவுண்ட் உள்ளிட்டவைகள் மூலம் பணத்தை செலவழிக்கலாம். ஆனால் வங்கி சார்பில் பிப்ரவரி 29ஆம் தேதிக்கு பிறகு பண பரிமாற்றங்களை அனுமதிக்க கூடாது. பயனர்கள் தொடர்ந்து பேடிஎம் யூபி ஐ சேவையை பயன்படுத்தலாம்.