அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அடுத்த வாரம் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவை சந்திக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது.
இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அடுத்த வாரம் அமெரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அப்பொழுது அவர் வாஷிங்டனில் அதிபர் பைடனை சந்திப்பார் என்று கூறப்படுகிறது. அவருடைய உடல்நிலை பொறுத்தே இந்த சந்திப்பு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று வெள்ளை மாளிகை வட்டாரங்கள் கூறியுள்ளன. இதுகுறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலிங் செய்து தொடர்பாளர் ஜான் கூறுகையில், இரு தலைவர்களும் சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. எனினும் அதிபரின் உடல் நிலை சரியாக வேண்டும். அவர் குணமடைய வேண்டும். எனவே தற்போதைய சூழலில் எதையும் எங்களால் உறுதியாக கூற முடியாது என்றார். இரு நாட்டு தலைவர்களும் காசா போர் குறித்து ஆலோசனை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போர் நிறுத்தம் குறித்து நேதன்யாகுவை பைடன் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.














