இந்தியாவின் மொத்த விலை பணவீக்கம் 3 மாத வீழ்ச்சி

February 15, 2024

கடந்த ஜனவரி மாதத்தில், இந்தியாவின் மொத்த விலை பணவீக்கம் மூன்று மாத வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. ஜனவரி மாதத்தில், உணவு பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றின் விலைகளில் கடும் சரிவு பதிவாகி இருந்தது. அதன்படி, இந்தியாவில் மொத்த விலை பணவீக்கம் 0.27% அளவில் பதிவாகியுள்ளது. கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில், மொத்த விலை பணவீக்கம் மைனஸ் விகிதத்தில் பதிவாகி வந்தது. அதன் பிறகு, நவம்பரில் 0.39% ஆக உயர்ந்தது. அதன் பின்னர், டிசம்பரில் 0.73% ஆக […]

கடந்த ஜனவரி மாதத்தில், இந்தியாவின் மொத்த விலை பணவீக்கம் மூன்று மாத வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

ஜனவரி மாதத்தில், உணவு பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றின் விலைகளில் கடும் சரிவு பதிவாகி இருந்தது. அதன்படி, இந்தியாவில் மொத்த விலை பணவீக்கம் 0.27% அளவில் பதிவாகியுள்ளது. கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில், மொத்த விலை பணவீக்கம் மைனஸ் விகிதத்தில் பதிவாகி வந்தது. அதன் பிறகு, நவம்பரில் 0.39% ஆக உயர்ந்தது. அதன் பின்னர், டிசம்பரில் 0.73% ஆக உயர்ந்து, ஜனவரியில் மீண்டும் வீழ்ச்சி அடைந்துள்ளது. உணவுத்துறையில், காய்கறிகள் தொடர்பான பணவீக்கம் 26.3% அளவில் இருந்து 19.71% அளவுக்கு குறைந்துள்ளது. இது தவிர, பழங்கள், பால் பொருட்கள் போன்றவற்றின் விலைகளும் ஜனவரி மாதத்தில் குறைந்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu