பிரான்சில் தென் கிழக்கு பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டதில் 600 ஹெக்டேருக்கும் மேலான காட்டுப்பகுதி தீக்கிரையாகியுள்ளது என்று அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் தென் கிழக்கு பகுதியில் வார் மாகாணம் உள்ளது. இங்கு மவுரஸ் மௌசிப் என்ற காட்டுப்பகுதி பகுதியில் நேற்று திடீரென காட்டுத்தீ பரவியது. இந்த காட்டில் கரடு முரடான மலை குன்றுகள் உள்ளன. காற்று பலமாக வீசியதால் இந்த காட்டுப்பகுதி முழுவதும் காட்டுத்தீ பரவியது. தீயணைப்பு துறையினர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ஹெலிகாப்டர்கள் மற்றும் வாகனங்களுடன் விரைந்தனர். அவர்கள் இந்த தீயை அணைக்க கடுமையாக போராடி வருகிறார்கள். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த காட்டுப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த காட்டுத்தீ காரணமாக இதுவரை 600 ஹெக்டேருக்கும் மேலான காட்டுப்பகுதி தீக்கிரையாகியுள்ளது என்று அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.