கச்சா எண்ணெய் மீதான விண்ட்பால் வரி குறைப்பு

September 20, 2022

மத்திய அரசு கச்சா எண்ணெய் மீதான விண்ட்பால் வரியை டன்னுக்கு 13,000 ரூபாயில் இருந்து 10,500 ரூபாயாக குறைத்துள்ளது. இது குறித்து மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையில் , உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீதான ஏற்றுமதி லாப வரியை டன்னுக்கு ரூ.13,300ல் இருந்து ரூ.10,500 ஆக குறைத்துள்ளது. அதேபோல் டீசலுக்கான ஏற்றுமதி லாப வரி லிட்டருக்கு ரூ.13.5 ஆக இருந்ததை ரூ.10 ஆகவும், விமான எரிபொருளுக்கான ஏற்றுமதி லாபவரி லிட்டருக்கு ரூ.9ல் இருந்து […]

மத்திய அரசு கச்சா எண்ணெய் மீதான விண்ட்பால் வரியை டன்னுக்கு 13,000 ரூபாயில் இருந்து 10,500 ரூபாயாக குறைத்துள்ளது.

இது குறித்து மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையில் ,
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீதான ஏற்றுமதி லாப வரியை டன்னுக்கு ரூ.13,300ல் இருந்து ரூ.10,500 ஆக குறைத்துள்ளது. அதேபோல் டீசலுக்கான ஏற்றுமதி லாப வரி லிட்டருக்கு ரூ.13.5 ஆக இருந்ததை ரூ.10 ஆகவும், விமான எரிபொருளுக்கான ஏற்றுமதி லாபவரி லிட்டருக்கு ரூ.9ல் இருந்து ரூ.5 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த புதிய கட்டணங்கள் செப்டம்பர் 17 முதல் நடைமுறைக்கு வரும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது மற்ற நாட்டிடமி௫ந்து இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் விலை ஆகஸ்ட் மாதத்தில் 97.40 டாலராக இருந்த நிலையில், செப்டம்பரில் ஒரு பேரலுக்கு 92.67 டாலராக குறைந்தது. அதன் விளைவாக இந்த வரிக் குறைப்பு அமலுக்கு வந்ததாக க௫தப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu