புதிய உணவகங்களுக்கு முதல் மாத கமிஷன் பிடித்தம் இல்லை - ஸ்விக்கி லாஞ்ச்பேட்

March 20, 2023

பிரபல உணவு விநியோக நிறுவன ஸ்விக்கி, ஸ்விக்கி லாஞ்ச்பேட் என்ற புதிய தளத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, ஸ்விக்கி தளத்தில் புதிதாக இணையும் உணவகங்களுக்கு, அவர்களின் முதல் மாதத்தில், எந்தவித கமிஷன் தொகையும் பிடித்தம் செய்யப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஸ்விக்கி தளத்துடன் இணையும் உணவகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பேசிய ஸ்விக்கி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரோஹித் கபூர், “கமிஷன் தொகை இல்லை என்பதால் அதிக எண்ணிக்கையிலான உணவகங்கள், கிளவுட் […]

பிரபல உணவு விநியோக நிறுவன ஸ்விக்கி, ஸ்விக்கி லாஞ்ச்பேட்
என்ற புதிய தளத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, ஸ்விக்கி தளத்தில் புதிதாக இணையும் உணவகங்களுக்கு, அவர்களின் முதல் மாதத்தில், எந்தவித கமிஷன் தொகையும் பிடித்தம் செய்யப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஸ்விக்கி தளத்துடன் இணையும் உணவகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து பேசிய ஸ்விக்கி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரோஹித் கபூர், “கமிஷன் தொகை இல்லை என்பதால் அதிக எண்ணிக்கையிலான உணவகங்கள், கிளவுட் கிச்சன்கள் மற்றும் உணவுத் துறையில் களமிறங்கும் தொழில் முனைவோர்கள் ஆகியோர் பயனடைவர். அவர்களுக்கான வாடிக்கையாளர் தளம் விரிவுபடுத்தப்படும்” என்று கூறியுள்ளார். மேலும், இது புதிதாக இணையும் உணவகங்களுக்கு மட்டுமே வழங்கப்படும் சலுகை என்பதை தெளிவுபடுத்தி உள்ளார்.

புதிதாக இணையும் உணவகங்களுக்கு வேறு சில சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஸ்விக்கியில் இலவசமாக விளம்பரங்கள் செய்வது, உணவக எல்லைகளைத் தாண்டிய கூடுதல் இடங்களுக்கு டெலிவரி செய்வது, ஆகிய சேவைகள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம், புதிய உணவகங்கள் 20000 ரூபாய் வரை சேமிக்க முடியும் என கருதப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu