ரீஃபண்ட் கோரிக்கை நிறுத்திவைப்பு - வருமான வரித்துறை தகவல்

October 11, 2023

கடந்த நிதியாண்டுக்கான வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில் இதுவரை 35 லட்சம் பேருக்கு தர வேண்டிய ரீஃபண்ட் தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வருமான வரித்துறை நிர்வாக அமைப்பாளர் மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் தெரிவித்துள்ள அறிவிப்பில், கடந்த நிதியாண்டில் ஏழு கோடியே 27 லட்சம் வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் 7 கோடியே 15 லட்சம் கணக்குகள் சரி பார்க்கபட்டுள்ளது. அவற்றில் 6 கோடி 8 லட்சம் கணக்குகள் தணிக்கை […]

கடந்த நிதியாண்டுக்கான வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில் இதுவரை 35 லட்சம் பேருக்கு தர வேண்டிய ரீஃபண்ட் தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
வருமான வரித்துறை நிர்வாக அமைப்பாளர் மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் தெரிவித்துள்ள அறிவிப்பில், கடந்த நிதியாண்டில் ஏழு கோடியே 27 லட்சம் வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் 7 கோடியே 15 லட்சம் கணக்குகள் சரி பார்க்கபட்டுள்ளது. அவற்றில் 6 கோடி 8 லட்சம் கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.
மேலும் இதுவரை 9 லட்சத்து 57 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்து. ரூபாய் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் கோடி ரீஃபண்ட் அளிக்கப்பட்டிருக்கிறது.
இது தவிர வங்கி பல்வேறு காரணங்களால் 35 லட்சம் பேருக்கு தரவேண்டிய ரீபண்ட் தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு கால் சென்டர் மூலமாக அழைத்து பிரச்சினைக்கு தீர்வு காண முடிவெடுக்கப்பட்டுள்ளது. வீட்டுக்கடன் மற்றும் சேமிப்புகளுக்கு வரச் சலுகை அழிக்காத புதிய வருமான வரி திட்டம் கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை 600 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக கூறியுள்ளார். இதில் கிரிப்டோ கரன்சி மூலமாக 30 சதவீத வரி விதிக்கப்பட்டு இதுவரை 105 கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu