புதுச்சேரி அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று முதல் மந்திரி ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல் மந்திரி ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையில் விதவை உதவித்தொகை ரூ.2,500-லிருந்து ரூ.3,000 ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.7,500 இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.













