கலைஞரின் மகளிர் உரிமை திட்டத்திற்காக டோக்கன் மற்றும் விண்ணப்பங்கள் வழங்க 36,000 முகாம்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இன்று காலை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூடியது. அதில் அமைச்சரவை கூட்டம் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
இதில் மக்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டங்கள் மூலம் வழங்கப்படும் ஓய்வூதியங்கள் அனைத்தும் உயர்த்தப்படுகிறது. இதனால் அரசுக்கு ரூபாய் 845.91 கோடி கூடுதல் செலவினம் உருவாகும். மேலும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் முகாம்கள் மூன்று கட்டங்களாக நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரேஷன் கடைகள் முதல் கட்டமாக 21,031 முகாம்கள், இரண்டாம் கட்டமாக 14,194 முகாம்கள் என ஆகஸ்ட் மாதத்திற்குள் 35,925 முகாம்கள் நடத்தப்பட இருக்கின்றன. தற்போது டோக்கன்கள் மற்றும் விண்ணப்பங்கள் 50 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.