தமிழக அரசு, பெண்களுக்கான பிரத்தியேக விடுதிகளை புதிதாக திறந்துள்ளது. குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, பெரம்பலூர், திருச்சி, சேலம், தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம், திருநெல்வேலி ஆகிய 9 மாவட்டங்களில் தோழி விடுதிகள் திறக்கப்பட்டுள்ளன. இதுவரை, சுமார் 11 விடுதிகள் மகளிர் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், தோழி விடுதிகள் குறித்து, நேற்று ட்விட்டர் வாயிலாக பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தனது ட்விட்டர் பதிவில், "தோழி விடுதிகள் முன்னேறும் பெண்களுக்கான முகவரியாக இருக்கிறது" என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். மேலும், "திராவிட மாடலின் வழியே செயல்படுத்தப்பட்டு இருக்கும் தோழி விடுதிகள், வரலாற்றின் பக்கங்களில் இடம்பெறும்" என பெருமிதமாக கூறியுள்ளார். தோழி விடுதியில் சேர விரும்பும் பெண்கள் 9499988009 என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை அறியலாம் என தமிழக அரசு கூறியுள்ளது.