மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை நாளை தொடக்கம்

2024 ஆம் ஆண்டு மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நாளை தொடங்குகிறது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) 2009-ம் ஆண்டு மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியை அறிமுகம் செய்தது. இங்கிலாந்தில் நடந்த முதல் போட்டியில், நியூசிலாந்தை வீழ்த்தி, இங்கிலாந்து சாம்பியன் பட்டம் வென்றது. கடந்த ஆண்டு, தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற இறுதியில், ஆஸ்திரேலியா வெற்றிபெற்றது. இந்த போட்டி 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது, இதுவரை 8 […]

2024 ஆம் ஆண்டு மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நாளை தொடங்குகிறது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) 2009-ம் ஆண்டு மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியை அறிமுகம் செய்தது. இங்கிலாந்தில் நடந்த முதல் போட்டியில், நியூசிலாந்தை வீழ்த்தி, இங்கிலாந்து சாம்பியன் பட்டம் வென்றது. கடந்த ஆண்டு, தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற இறுதியில், ஆஸ்திரேலியா வெற்றிபெற்றது. இந்த போட்டி 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது, இதுவரை 8 உலக கோப்பை போட்டிகள் நடைபெற்றுள்ளன. ஆஸ்திரேலியா 6 முறை (2010, 2012, 2014, 2018, 2020, 2023) வெற்றிபெற்றுள்ளது, மற்ற அணிகள் இங்கிலாந்து (2009), வெஸ்ட் இண்டீஸ் (2016) தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளன. 9-வது மகளிர் 20 ஓவர் உலக கோப்பை போட்டி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. 20-ந்தேதி வரை துபாய் மற்றும் ஷார்ஜாவில் போட்டிகள் நடைபெற உள்ளன. வங்காளதேசத்தில் நடைபெற இருந்த போட்டி, அங்கு ஏற்பட்ட அரசியல் சூழல் காரணமாக மாற்றப்பட்டது. இப்போட்டியில் 10 நாடுகள் 2 பிரிவுகளில் போட்டியிடுகின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu