காங்கோ நாட்டின் ஈக்வடூர் மாகாணத்தில், 150க்கும் மேற்பட்டோர் ஏற்றிய மரப்படகு விபத்துக்குள்ளாகியது.
காங்கோ நாட்டின் ஈக்வடூர் மாகாணத்தில், 150க்கும் மேற்பட்டோர் ஏற்றிய மரப்படகு, ருகி ஆற்றில் பயணித்த போது தீ விபத்துக்கு ஆளானது. படகில் எரிபொருட்களும் ஏற்றப்பட்டு, சமையல் செய்தபோது தீ பரவியது. தீ மளமளவென பரவி, மரத்தால் ஆன படகு முழுவதும் எரிந்து பரவியது.
இந்த விபத்தில் 143 பேர் உயிரிழந்ததுடன், சிலர் ஆற்றில் குதித்து மாயமானனர். சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்ததாக கூறப்படுகிறது. போதிய தகவல் தொடர்பு வசதி இல்லாத காரணத்தால் இந்த விபத்து பற்றிய தகவல்கள் தற்போது வெளியே வந்துள்ளன.