அமெரிக்காவின் எச்-1பி விசா இருந்தால் கனடாவில் பணிபுரிய கனடா அரசு அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து கனடா நாட்டின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சகம் அதிகாரபூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் அமெரிக்க ஹெச்-1பி (H-1B) விசா வைத்திருப்பவர்களில் 10 ஆயிரம் பேர் கனடா நாட்டிற்கு வந்து பணிபுரிய அனுமதிக்கும் வகையில் பணி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இப்புதிய முடிவின் கீழ் வரப்போகும் ஜூலை 16 முதல் அங்கீகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் 3 ஆண்டுகள் வரை கனடாவில் பணியாற்ற திறந்த பணி அனுமதி (open work permit) பெறுவார்கள். அவர்களின் வாழ்க்கைத் துணை மற்றும் அவர்களை சார்ந்திருப்பவர்கள் ஆகியோருக்கும் அவர்களின் தேவைக்கேற்ப வேலை அல்லது படிப்பு கிடைப்பதற்கு இந்த தற்காலிக குடியுரிமை விசா வழி செய்கிறது என்று கூறப்பட்டுள்ளது.














