உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகிறது.உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அனைத்து அணிகளும் நேற்றுடன் ஐந்து ஆட்டத்தில் விளையாடி விட்டனர். இன்று முதல் ஆறாவது போட்டி தொடங்குகின்றது. இதில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளது. இன்று காலை தர்மசாலாவில் ஆஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில் ஆஸ்திரேலியா அணி 5 ஆட்டங்களில் மூன்றில் வெற்றி இரண்டில் தோல்வி அடைந்துள்ளது. நியூசிலாந்து அணி ஐந்து ஆட்டத்தில் நான்கில் வெற்றி பெற்று ஒன்றில் தோல்வி அடைந்துள்ளது.
இரண்டாவது ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் வங்காளதேசம் மற்றும் நெதர்லாந்து இடையே நடைபெறுகிறது. இதில் இரண்டு அணிகளும் ஒரு வெற்றி நான்கு தோல்விகளுடன் விளையாடுகின்றன.