உலகக்கோப்பை கால்பந்து போட்டியை முன்னிட்டு கத்தாருக்கு 2½ கோடி முட்டை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் மண்டலத்தில் இருந்து குவைத், ஈரான், கத்தார், மாலத்தீவு, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி செய்யப்படுகிறது. முன்னதாக கத்தாருக்கு 50 லட்சம் முட்டைகள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில், உலகக்கோப்பை கால்பந்து போட்டி எதிரொலியாக அது 1½ கோடி முட்டைகளாக கடந்த மாதம் உயர்ந்தது.
தற்போது சுமார் 1 கோடி முட்டைகள் கத்தாருக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாகவும், இதுவரை மொத்தமாக சுமார் 2 கோடியே 50 லட்சம் முட்டைகள் நாமக்கல் மண்டலத்தில் இருந்து கத்தாருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி மாதத்திற்குள் மேலும் 2 கோடி முட்டைகள் வரை கத்தாருக்கு ஏற்றுமதி செய்யப்பட இருப்பதாக ஏற்றுமதியாளர் டாக்டர் பி.வி.செந்தில் கூறினார்.














