குரோஷியாவில் வருகிற 14ம் தேதி முதல் 14ஆம் தேதி வரை முதலாவது உலக ரேங்கிங் போட்டியான ஜாக்கிரப் ஓபன் மல்யுத்த போட்டி நடைபெற உள்ளது.
ஜாக்கிரப் ஓபன் போட்டி எனப்படும் முதலாவது உலக ரேங்கிங் மல்யுத்த போட்டி குரோஷியாவில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் இந்திய மல்யுத்த அணி இந்திய ஒலிம்பிக் சங்கத்தால் நியமிக்கப்பட்ட பூபிந்தர் சிங் பஜ்வா தலைமையிலான இடைக்கால கமிட்டி அறிவித்துள்ளது. இது இந்திய மல்யுத்த சம்மேளனம் இடைநீக்கம் செய்யப்பட்ட பிறகு அறிவிக்கப்பட்ட முதல் அணியாகும். இந்த அணியில் 13 வீரர், வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர். மேலும் இதில் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற பஜ்ரங் பூனியா, சீனியர் உலக போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற இளம் வீராங்கனை அன்திம் பன் ஹால் ஆகியோர் இடம் பெறவில்லை. இதுகுறித்து கேட்கப்பட்டதில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்ற வீரர்களிடம் போட்டியில் பங்கேற்க விருப்பம் உள்ளதா என கேட்கப்பட்டதில் 13 பேர் மட்டும் சம்மதம் தெரிவித்தனர்.மீதம் 5 பேர் கலந்து கொள்ள விருப்பமில்லை என தெரிவித்தனர். இதில் பஜ்ரங் போனியா பயிற்சி தொடங்காததால் இந்திய அணியில் இடம் பிடித்தால் வீணாக போய்விடும் என்று விலகிவிட்டார் எனவும், அர்ஜுனா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் அன்திம் பன் ஹால் தேசிய விளையாட்டு விருது வழங்கும் விழாவில் பங்கேற்க இருப்பதால் இந்த போட்டியை தவிர்த்து விட்டார் எனவும் தெரிவித்துள்ளனர்.