உலகின் அதிக வெப்பமான நாள் - 2023 ஜூலை 3

July 5, 2023

கடந்த திங்கட்கிழமை, உலகின் அதிக வெப்பமான நாளாக பதிவு செய்யப்பட்டுள்ளது. உலக அளவில், வெப்பமான நாட்கள் மற்றும் குளிர்ச்சியான நாட்கள் ஆகியவற்றை பதிவு செய்யும் நடைமுறை தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து தற்போது வரையில், கடந்த ஜூன் 3ம் தேதியே மிகவும் வெப்பமான நாளாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினத்தில், சர்வதேச சராசரி வெப்பநிலை 17.01 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகி இருந்தது. இதற்கு முன்னர், வெப்பமான நாளாக அறியப்பட்டது கடந்த 2016 ஆகஸ்ட் மாதம் ஆகும். அப்போது, […]

கடந்த திங்கட்கிழமை, உலகின் அதிக வெப்பமான நாளாக பதிவு செய்யப்பட்டுள்ளது. உலக அளவில், வெப்பமான நாட்கள் மற்றும் குளிர்ச்சியான நாட்கள் ஆகியவற்றை பதிவு செய்யும் நடைமுறை தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து தற்போது வரையில், கடந்த ஜூன் 3ம் தேதியே மிகவும் வெப்பமான நாளாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினத்தில், சர்வதேச சராசரி வெப்பநிலை 17.01 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகி இருந்தது. இதற்கு முன்னர், வெப்பமான நாளாக அறியப்பட்டது கடந்த 2016 ஆகஸ்ட் மாதம் ஆகும். அப்போது, சர்வதேச சராசரி வெப்பநிலை 16.92 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

2023 ஆம் ஆண்டில், உலகின் பல்வேறு பகுதிகளிலும் அதிகமான சராசரி வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு, எல் நினோ விளைவு முக்கிய காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது. ஆனால், சூழலியல் ஆராய்ச்சியாளர் ஃப்ரெட்ரிக் ஆட்டோ, “பசுமை குடில் வாயுக்கள் வெளியேற்றம், கார்பன் வெளியேற்றம் போன்றவை அதிகரிப்பதுடன் எல் நினோ தாக்கமும் இணைந்துள்ளதால், இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது. இது மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்குமான மரண ஒலி” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu