உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பல் - சனிக்கிழமை முதல் பயணத்தை தொடங்கியது

January 29, 2024

உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பல் கடந்த சனிக்கிழமை முதல் தனது கடல் பயணத்தை தொடங்கியுள்ளது. ராயல் கரீபியன் கப்பல் நிறுவனம், ‘ஐகான் ஆப் தி சீஸ்’ என்ற பெயரில் உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பலை வடிவமைத்துள்ளது. கிட்டத்தட்ட 1200 அடியில், 4 கட்டிடங்களை இணைத்தது போன்ற அளவில் இந்த சொகுசு கப்பல் உள்ளது. மியாமி துறைமுகத்தில் இருந்து தனது முதல் கடல் பயணத்தை இந்த கப்பல் தொடங்கியுள்ளது. பிரபல கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸி, முதல் பயணத்தை […]

உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பல் கடந்த சனிக்கிழமை முதல் தனது கடல் பயணத்தை தொடங்கியுள்ளது.

ராயல் கரீபியன் கப்பல் நிறுவனம், ‘ஐகான் ஆப் தி சீஸ்’ என்ற பெயரில் உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பலை வடிவமைத்துள்ளது. கிட்டத்தட்ட 1200 அடியில், 4 கட்டிடங்களை இணைத்தது போன்ற அளவில் இந்த சொகுசு கப்பல் உள்ளது. மியாமி துறைமுகத்தில் இருந்து தனது முதல் கடல் பயணத்தை இந்த கப்பல் தொடங்கியுள்ளது. பிரபல கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸி, முதல் பயணத்தை தொடங்கி வைத்தார். இந்த கப்பலில் 7600 பயணிகள் தவிர 2350 கப்பல் ஊழியர்கள் பயணிக்க முடியும். சுமார் 20 அடுக்குகள் கொண்ட இந்த கப்பலுக்குள், நீச்சல் குளம், திரையரங்கம், உணவகங்கள், ஓய்வறைகள், மதுபான விடுதிகள், பொழுதுபோக்கு அம்சங்கள், விளையாட்டு அறைகள் போன்றவை உள்ளன. கிட்டத்தட்ட 900 நாட்களில் இந்த கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு இந்திய மதிப்பில் 16,600 கோடி ரூபாய் என சொல்லப்பட்டுள்ளது. மேலும், இந்த கப்பல் நீரால் கிடைக்கும் இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu