சென்னையில் முகமது இத்ரிஸ் எனும் மருந்து கடை ஊழியரின் வங்கி கணக்கில் ரூபாய் 753 கோடி ரூபாய் தவறுகளாக டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மருந்து கடை ஒன்றில் பணிபுரியும் ஊழியர் ஒருவரின் கோடக் மகேந்திரா வங்கி கணக்கில் ரூபாய் 753 கோடி ரூபாய் திடீரென டெபாசிட் ஆகிவிட்டது. மேலும் அவரது வங்கி கணக்கு உடனே முடக்கப்பட்டுள்ளது. வருமான வரி பிரச்சினை வந்து விடக்கூடாது என்பதற்காக இவர் வங்கியின் இலவச எண்ணை தொடர்பு கொண்டு இணைப்பு கிடைக்காததால் நேரில் சென்று புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். வங்கி ஊழியர்களின் கவனக்குறைவால் இது போன்ற தவறுகள் நடைபெறுகிறது. இனி கவனமாக செயல்பட வேண்டும் என கூறியுள்ளார். இதற்கு முன்னதாக தஞ்சையில் நேற்று வாடிக்கையாளர் வாங்கி கணக்கில் ரூபாய் 756 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.