எக்ஸ் தளத்தின் அனைத்து பயனர்களிடமிருந்து மாத கட்டணம் வசூலிக்கும் திட்டத்தில் ஈடுபட உள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதென்யாகுவுடன் எலான் மஸ்க் நடத்திய உரையாடலில் இது தொடர்பான குறிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில், பிரீமியம் சந்தாதாரர்களாக உள்ள ட்விட்டர் ப்ளூ பயனர்களுக்கு, அதைவிட குறைவான விலையில் மற்றொரு சந்தா திட்டம் கொண்டு வர உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். அவரது இந்த நடவடிக்கைகள் மூலம், பல்வேறு போலி கணக்குகள் களையப்படும் என கூறியுள்ளார். அத்துடன், போலி கணக்குகளுக்கு எதிராக செயல்பட இதுவே எஞ்சி இருக்கும் ஒரே திட்டம் என கூறியுள்ளார். தற்போதைய நிலையில், ஒவ்வொரு எக்ஸ் பயனரும் 8 டாலர்கள் மாத கட்டணம் செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.