புதின் - ஜி ஜின்பிங் வரலாற்று சந்திப்பு நிகழ்வுகள்

March 21, 2023

சீன அதிபர் ஜி ஜின்பிங், மூன்று நாள் அரசு முறை பயணமாக ரஷ்யா சென்று உள்ளார். அங்கு அவர் பிரதமர் விளாடிமிர் புதினை இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பின் போது நிகழ்ந்த உரையாடல் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங், புதினை தனது ‘நண்பராக’ அழைத்து, “உங்கள் வலுவான தலைமையில் ரஷ்யா கடந்த சில வருடங்களாக முக்கிய வளர்ச்சிகளை எட்டியுள்ளது. எனவே, உங்கள் நாட்டில் வரும் 2024 ஆம் […]

சீன அதிபர் ஜி ஜின்பிங், மூன்று நாள் அரசு முறை பயணமாக ரஷ்யா சென்று உள்ளார். அங்கு அவர் பிரதமர் விளாடிமிர் புதினை இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பின் போது நிகழ்ந்த உரையாடல் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.

சீன அதிபர் ஜி ஜின்பிங், புதினை தனது ‘நண்பராக’ அழைத்து, “உங்கள் வலுவான தலைமையில் ரஷ்யா கடந்த சில வருடங்களாக முக்கிய வளர்ச்சிகளை எட்டியுள்ளது. எனவே, உங்கள் நாட்டில் வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் மக்கள் நிச்சயம் உங்களுக்கே ஆதரவு அளிப்பர்” என்று கூறினார். மேலும், தொடர்ந்து நிகழ்ந்த பேச்சு வார்த்தையில், உக்ரைன் - ரஷ்யா போர் நிறுத்தம் குறித்து கலந்துரையாடப்பட்டதா? என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu