ஷாவ்மி கைப்பேசி நிறுவனத்தின் இந்தியப் பிரிவு வர்த்தகம் 2022 ஆம் நிதி ஆண்டில் அதிகரித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. நிறுவனத்தின் வருவாய் 9% உயர்ந்து, 39099 கோடியாக பதிவாகியுள்ளது. பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையத்திற்கு சமர்ப்பித்த அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை மூலம், இந்தியாவில் சீன எதிர்ப்பு பிரச்சாரங்கள் ஷாவ்மிக்கு எதிராக திரும்ப வில்லை என்று உணர்த்துவதாக அமைந்துள்ளது.
ஷாவ்மி நிறுவனத்திற்கு போட்டியாக சாம்சங் மற்றும் எல்ஜி நிறுவனங்கள் இந்தியாவில் முக்கிய பங்காற்றுகின்றன. குறிப்பிட்ட நிதியாண்டில், சாம்சங் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு வருவாய் 82451 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், கைப்பேசிகள் வர்த்தகத்தின் மூலமாக மட்டுமே 55201 கோடி ஈட்டப்பட்டுள்ளது. அதே வேளையில், எல்ஜி நிறுவனத்தின் விற்பனை மதிப்பு 17171 கோடியாக பதிவாகியுள்ளது. மேலும், 2021 ஆம் ஆண்டில், 24% ஆக ஷாவ்மி சந்தை பங்கு, 2022 ஆம் ஆண்டில் 20% ஆக சரிந்துள்ளது.