வரும் ஜூன் இரண்டாம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தமிழகத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜூன் இரண்டாம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய மாநில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த இரண்டு, மூன்று நாட்களில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கேரளாவிற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதே நேரத்தில் ராஜஸ்தான், பஞ்சாப், அரியானா, சண்டிகர், டெல்லி, உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் வெப்பஅலை வீச வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது