எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். நீட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு நீட் தேர்வுக்கான தேதியை 2 மாதத்திற்கு முன்பே தேசிய தேர்வு முகமை அறிவித்தது. மே மாதம் 7-ந்தேதி நடைபெறுவதாக முன்கூட்டியே அறிவிக்கப்பட்டதால் மாணவ-மாணவிகள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் நிலையில் நீட் […]

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு நீட் தேர்வுக்கான தேதியை 2 மாதத்திற்கு முன்பே தேசிய தேர்வு முகமை அறிவித்தது. மே மாதம் 7-ந்தேதி நடைபெறுவதாக முன்கூட்டியே அறிவிக்கப்பட்டதால் மாணவ-மாணவிகள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் நிலையில் நீட் தேர்வுக்கு இன்று (6-ந்தேதி) முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேசிய முகமை தெரிவித்துள்ளது. neetnta.nic.in என்ற இணையதளத்தின் வழியாக பெயர் மற்றும் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். அதற்கான விண்ணப்ப படிவத்தினை நேரடி லிங் மூலம் பதிவு செய்யலாம். மாணவ-மாணவிகள் முக்கியமான ஆவணங்களை இணைத்து பதிவு கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நீட் தேர்வு தொடர்பாக தகவல் கையேடும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu