பிளஸ் - 2 மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் - 2 மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வு எழுதியவர்களில் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள், உரிய நகல்களை அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தரவிறக்கம் செய்து சரிபார்க்கலாம். அதன் அடிப்படையில் மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டல் செய்ய விரும்புவோர் அதே தளத்தில் அதற்கான விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். விண்ணப்பத்தை இன்று முதல் ஜூன் 3 மாலை 5 மணிக்குள் அரசுத் தேர்வுகள் […]

பிளஸ் - 2 மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்வு எழுதியவர்களில் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள், உரிய நகல்களை அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தரவிறக்கம் செய்து சரிபார்க்கலாம். அதன் அடிப்படையில் மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டல் செய்ய விரும்புவோர் அதே தளத்தில் அதற்கான விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். விண்ணப்பத்தை இன்று முதல் ஜூன் 3 மாலை 5 மணிக்குள் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டலுக்கான கட்டணமாக உயிரியல் பாடத்துக்கு ரூ.305 ; இதர பாடங்களுக்கு ரூ.205 கட்ட வேண்டும். மறுமதிப்பீடுக்கு ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும். மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் இந்த கட்டணத்தை ரொக்கமாக செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu