தாய்லாந்து நாட்டில் மன்னராட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அந்நாட்டின் நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மன்னராட்சி முறைக்கு எதிராக குரல் கொடுத்து வந்த இளைஞர்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளதாக கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன.
தாய்லாந்து நாட்டின் தற்போதைய மன்னர் வஜ்ரலாங்கோர்ன், மக்களிடத்தில் நன்மதிப்பை இழந்துள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு, அவரது தந்தை மரணித்த பிறகு பதவிக்கு வந்த இவர், பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். இதனால், மக்களிடையே நம்பிக்கை இழந்த இவரையும், மன்னர் ஆட்சி முறையையும் எதிர்த்து, மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். முக்கியமான மாணவ பிரதிநிதிகள் இதற்காக கைது செய்யவும் பட்டனர். இந்நிலையில், வெறும் போராட்டங்கள் மட்டுமே பயன் தராது என கருதி, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட இளைஞர்கள் களமிறங்கி உள்ளனர். இவர்களுக்கு மக்களிடையே அமோக ஆதரவு உள்ளதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளிவந்துள்ளன. குறிப்பாக, சோந்திச்சா, டோடோ போன்றவர்களுக்கு ஆதரவு மிகுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.