யூட்யூப் தளத்தில் புதிதாக கேமிங் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
யூடியூப் ப்ரீமியம் சந்தா திட்டத்தில் பல்வேறு அம்சங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, விளம்பரம் இல்லா சேவை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, கேமிங் வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. யூட்யூப் பிளேயபில்ஸ் என்ற பெயரில் இந்த கேமிங் சேவை அழைக்கப்படுகிறது. பயனர்கள், யூடியூப் தளத்தில் நேரடியாக விளையாடும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், கணினியில் மட்டும் இந்த சேவைகளை பெற முடியும் என கூறப்படுகிறது. கைப்பேசியில் இந்த சேவைகள் முழுமையாக வெளியாகவில்லை என கூறப்படுகிறது. மேலும், தற்சமயம் இலவசமாக விளையாடக் கூடிய வகையில் உள்ள இந்த அம்சத்தை, வரும் மார்ச் 28 க்கு பிறகு பிரிமியம் பயனர்களுக்கு மட்டுமே வழங்குவது பற்றி யூடியூப் பரிசீலித்து வருகிறது.