உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கிய பிறகு முதல் முறையாக, உக்ரைன் அதிபர் விலோதிமிர் ஜெலன்ஸ்கி கனடாவுக்கு பயணம் மேற்கொண்டு உள்ளார். கனடா உக்ரைனின் நெருங்கிய நட்பு நாடு என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, அமெரிக்கா அதிபர் ஜோ பைடனை சந்திக்கும் ஜெலன்ஸ்கி, அமெரிக்க பயணத்தை முடித்துவிட்டு கனடா செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை சந்திக்கும் அவர், கனடா பாராளுமன்றத்தில் உரையாற்றுவார் என கூறப்படுகிறது. தொடர்ந்து,டொரோண்டோவில் வசிக்கும் உக்ரைன் மக்களை அவர் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில், கிட்டத்தட்ட 1.4 மில்லியன் எண்ணிக்கையில் உக்ரைன் பூர்வீக மக்கள் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.














