பிரபல உணவு விநியோக நிறுவனமான ஜொமாட்டோ, தனது டெலிவரி ஊழியர்கள் ஓய்வு எடுப்பதற்காக, 'ரெஸ்ட் பாயிண்ட்ஸ்' என்ற பெயரில் ஓய்வு அறைகளை அறிமுகப்படுத்துவதாக தெரிவித்துள்ளது. அத்துடன், பிற நிறுவனங்களில் பணிபுரியும் உணவு டெலிவரி ஊழியர்களும் இந்த அறைகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதுகுறித்து பேசிய ஜொமாட்டோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தீப்பீந்தர் கோயல், "ஷெல்டர் திட்டத்தின் பகுதியாக இந்த ரெஸ்ட் பாயிண்ட்ஸ் அமைக்கப்பட உள்ளது. இங்கு, உணவு டெலிவரியில் ஈடுபடும் ஊழியர்கள் ஓய்வெடுத்துக் கொள்ளலாம். இந்த அறைகளில், கைப்பேசிகளை சார்ஜ் செய்யும் வசதி, வைபை இணைப்பு, குடிநீர், கழிவறை, முதலுதவி போன்ற அத்தியாவசிய வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கும். இதனால், ஊழியர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும் சூழலை உருவாக்க முடியும்" என்று நம்புவதாக கூறியுள்ளார்.