பிரபல இணைய வழி உணவு விநியோக நிறுவனமான ஜொமாட்டோ, தனது இரண்டாம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் வருவாய் 72% உயர்ந்து, 2848 கோடி ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில், ஜொமேட்டோ நிறுவனத்தின் வரிக்கு பின்னான லாபம் 36 கோடி ரூபாயாக சொல்லப்பட்டுள்ளது. முந்தைய நிதி ஆண்டில், ஜொமாட்டோ நிறுவனம் 251 கோடி மதிப்பில் இழப்பை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, கடந்த காலாண்டில், நிறுவனத்தின் மொத்த செலவினங்கள் 309 கோடி அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, ஜொமாட்டோ நிறுவனம் மிக நல்ல முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது. இந்த முடிவுகள் வெளியானதன் விளைவாக, பங்குச்சந்தையில் ஜொமாட்டோ நிறுவன பங்குகள் கிட்டத்தட்ட 7% உயர்ந்து வர்த்தகமாகி வருகின்றன.