தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டும் ஜொமாட்டோ பங்குகள்

March 27, 2024

கடந்த 5 வர்த்தக நாட்களாக ஜொமாட்டோ பங்குகள் உயர்ந்து வருகின்றன. இன்றைய வர்த்தக நாளில், கிட்டத்தட்ட 3.48% உயர்ந்த ஜொமாட்டோ பங்குகள், மேலும் ஒரு புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது. ஜொமாட்டோ நிறுவனத்தின் ஒரு பங்கு 188.95 ரூபாய்க்கு வர்த்தகமானது. வருடாந்திர அடிப்படையில் இது 250% உயர்வாகும். அதாவது ஒரு வருடத்திற்கு முன்பு ஜொமாட்டோ நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 50 ரூபாயாக இருந்தது. பிரபல சந்தை மதிப்பாய்வு மற்றும் முகமை நிறுவனமான பெர்ன்ஸ்டைன், ஜொமாட்டோ நிறுவனத்தின் […]

கடந்த 5 வர்த்தக நாட்களாக ஜொமாட்டோ பங்குகள் உயர்ந்து வருகின்றன. இன்றைய வர்த்தக நாளில், கிட்டத்தட்ட 3.48% உயர்ந்த ஜொமாட்டோ பங்குகள், மேலும் ஒரு புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது. ஜொமாட்டோ நிறுவனத்தின் ஒரு பங்கு 188.95 ரூபாய்க்கு வர்த்தகமானது. வருடாந்திர அடிப்படையில் இது 250% உயர்வாகும். அதாவது ஒரு வருடத்திற்கு முன்பு ஜொமாட்டோ நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 50 ரூபாயாக இருந்தது.

பிரபல சந்தை மதிப்பாய்வு மற்றும் முகமை நிறுவனமான பெர்ன்ஸ்டைன், ஜொமாட்டோ நிறுவனத்தின் பங்கு மதிப்பு 200 ரூபாயை எட்டும் என தெரிவித்துள்ளது. மேலும், கோட்டக் நிதி நிறுவனம் ஜொமாட்டோ பங்குகள் 190 ரூபாயை எட்டும் என கணித்துள்ளது. இந்த செய்திகளின் விளைவாக ஜொமாட்டோ நிறுவனத்தின் பங்கு மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu