தொழில்நுட்ப நிறுவனமான ஜூம் நிறுவனம் சுமார் 1,300 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு தொடக்கம் முதல் அமேசான், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் பல ஆயிரக்கணக்கான ஊழியர்களை தொடர்ந்து நீக்கி வருகின்றன. இந்நிலையில், தகவல் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனமான ஜூம் நிறுவனம் சுமார் 1,300 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் என்று தலைமை நிர்வாகி எரிக் யுவான் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைப்பதிவில் தெரிவித்துள்ளார். நீங்கள் அமெரிக்காவை தளமாகக் கொண்ட பணியாளராக இருந்தால் அடுத்த 30 நிமிடங்களில் ஜூம் நிறுவனத்தால் தனிப்பட்ட மின்னஞ்சலைப் பெறுவீர்கள் என்றும், இந்த பணி நீக்கம் குறித்து அமெரிக்கா அல்லாத ஊழியர்களுக்கும் தெரிவிக்கப்படும் என்றும் யுவான் தெரிவித்தார்.