தமிழக அரசு எண்ணூரில் 2000 மெகாவாட் எரிவாயு மின் நிலையம் அமைக்க திட்ட அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
தமிழக மின்வாரியத்திற்கு 450 மெகாவாட் அனல்மின் நிலையம் எண்ணூரில் செயல்பட்டு வந்தது. இதன் ஆயுட்காலம் முடிவடைந்ததால் 2017 ஆம் ஆண்டு முதல் உற்பத்தி நிறுத்தப்பட்டது. பின்னர் 2000 மெகாவாட் எரிவாயு மின் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு இதற்கான அறிவிப்பு கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதில் விரிவான மின் நிலையம் அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி கடந்த ஆண்டு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிறுவனம் தற்போது அதன் வரைவு அறிக்கையை மின் வாரியத்திடம் சமர்ப்பித்துள்ளது. இதனை அடுத்து மின்வாரிய இயக்குனர்கள் பொதுக்கூட்டம் இம்மாத இறுதியில் நடைபெற உள்ளது. அதில் இந்த திட்ட அறிக்கை ஒப்புதல் பெறப்பட்டு தமிழக அரசின் அனுமதி பெறப்பட உள்ளது. பின்னர் இதன் கட்டுமான பணிகள் ஏப்ரல் மாதத்திற்குள் தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.