கடலில் 1.73 லட்சம் கன அடி தண்ணீர் கலந்து வீணாகிறது

August 9, 2022

வீணாக கடலில் கலக்கும் 1.73 லட்சம் கன அடி தண்ணீரை, அரியலுார் மாவட்ட பாசனத்துக்கு பயன்படும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரியலுார், தஞ்சை மாவட்டங்களை இணைக்கும் பகுதியில் கீழணை உள்ளது. இந்த அணையின் உயரம் 9 அடி ஆகும். அணையின் வாயிலாக, அரியலுார் மாவட்ட பகுதிகளில் உள்ள விளை நிலங்களும், கடலுார் மாவட்ட பகுதி விளை நிலங்களும் பாசனம் பெறுகின்றன. கொள்ளிடம் ஆற்றிலிருந்து வரும் தண்ணீர் கீழணையில் தேக்கப்படுகிறது. அணையில் […]

வீணாக கடலில் கலக்கும் 1.73 லட்சம் கன அடி தண்ணீரை, அரியலுார் மாவட்ட பாசனத்துக்கு பயன்படும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரியலுார், தஞ்சை மாவட்டங்களை இணைக்கும் பகுதியில் கீழணை உள்ளது. இந்த அணையின் உயரம் 9 அடி ஆகும். அணையின் வாயிலாக, அரியலுார் மாவட்ட பகுதிகளில் உள்ள விளை நிலங்களும், கடலுார் மாவட்ட பகுதி விளை நிலங்களும் பாசனம் பெறுகின்றன. கொள்ளிடம் ஆற்றிலிருந்து வரும் தண்ணீர் கீழணையில் தேக்கப்படுகிறது.
அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், வடவாறு, வழியாக கடலுார் மாவட்டத்தில் உள்ள 75 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. வடவாறு வழியாக பெறப்படும் தண்ணீர், வீராணம் ஏரியில் தேக்கப்பட்டு, அங்கிருந்து 44 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு, சென்னையின் குடிநீர் தேவைக்கும் அனுப்பப்படுகிறது. தற்போது, மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீர் காரணமாக, கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து செல்கிறது.

இதனால், கீழணைக்கு கொள்ளிடம் ஆற்றிலிருந்து வினாடிக்கு, 1 லட்சத்து, 74 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தற்போது, பாசனத்திற்கு தண்ணீர் தேவைப்படாததால், பொதுப்பணித்துறையினர், உபரிநீரை கொள்ளிடம் ஆற்றின் வழியாக திறந்து விட்டுள்ளனர். இதனால் 1 லட்சத்து 73 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் கடலில் வீணாக கலக்கும் நிலை உள்ளது.
கீழணைக்கு, கொள்ளிடம் ஆற்றிலிருந்து வரும் தண்ணீரை, திருமானுார் அருகே, வாய்க்கால் அமைத்து, பொன்னேரிக்கு கொண்டு சென்று சேமித்தால், கூடுதலாக, 5,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். ஆனால், வாய்க்கால் அமைக்கப்படாத நிலையில், கீழணைக்கு வரும் தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது.
இவ்வாறு வீணாகும் நீரை, வாய்க்கால் அமைத்து, பொன்னேரிக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அரியலுார் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu