ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமரின் ரகசிய பதவியேற்பு அரசாங்கத்திற்கு முரண்பாடானது என சட்ட உயரதிகாரி கருத்து தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் லிபரல் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகிய மோரிசன், இரகசியமாக சில துறைகளுக்கு அமைச்சர் பதவியேற்றது தெரியவந்ததது. இதன் விளைவாக மொரிசன் தொழிற்கட்சி அரசாங்கம் மற்றும் அவரது சொந்தக் கட்சியினரிடமிருந்து விமர்சனங்களை எதிர்கொண்டார். இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கூறியதாவது, " சொலிசிட்டர் ஜெனரலின் ஆலோசனையானது , முன்னாள் பிரதமரான ஸ்காட் மோரிசனின் இரகசிய நியமனம் சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் என்றாலும் அரசியலமைப்பால் பரிந்துரைக்கப்பட்ட அரசாங்க அமைப்பின் நடைமுறைகளுக்கு முரணானது" என்பதைக் காட்டுகிறது என்று ௯றினார். மேலும் குறிப்பிட்ட துறைகளின் நிர்வாகத்திற்கு அமைச்சர்களை பொறுப்புக் கூறுவது பாராளுமன்றத்திற்கும் பொதுமக்களுக்கும் கடினமான செயல் என்றும் கூறினார்.
மேலும் இந்த விஷயத்தில் "இன்னும் விசாரணை தேவை" என்று அமைச்சரவை ஒப்புக்கொண்டதாகவும் அல்போனீஸ் கூறினார். இதற்கு பதிலளிக்கும் வகையில் நாட்டை பாதுகாக்கும் பொறுப்பு தனக்கு இருப்பதாக உணர்ந்ததால், தான் இரகசியமாக அமைச்சக பதவிகளை ஏற்றுக்கொண்டதாக மோரிசன் கூறினார்.