14-வது ஹாக்கி இந்தியா தேசிய சீனியர் ஆண்கள் சாம்பியன்ஷிப் போட்டி

இந்தியா தேசிய சீனியர் ஹாக்கி ஆண்கள் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகம் மற்றும் கர்நாடகா அணிகள் தோல்வி அடைந்தன. 14-வது ஹாக்கி இந்தியா தேசிய சீனியர் ஆண்கள் சாம்பியன்ஷிப் போட்டி தற்போது சென்னை எழும்பூரில் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. 30 மாநில அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில், லீக் சுற்று முடிவில் 8 அணிகள் கால்இறுதிக்கு முன்னேறின. முதலாவது கால்இறுதி ஆட்டத்தில், பஞ்சாப்-மணிப்பூர் அணிகள் 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்ததைத் தொடர்ந்து, மணிப்பூர் 4-3 […]

இந்தியா தேசிய சீனியர் ஹாக்கி ஆண்கள் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகம் மற்றும் கர்நாடகா அணிகள் தோல்வி அடைந்தன.

14-வது ஹாக்கி இந்தியா தேசிய சீனியர் ஆண்கள் சாம்பியன்ஷிப் போட்டி தற்போது சென்னை எழும்பூரில் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. 30 மாநில அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில், லீக் சுற்று முடிவில் 8 அணிகள் கால்இறுதிக்கு முன்னேறின. முதலாவது கால்இறுதி ஆட்டத்தில், பஞ்சாப்-மணிப்பூர் அணிகள் 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்ததைத் தொடர்ந்து, மணிப்பூர் 4-3 என வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறியது. மற்றொரு ஆட்டத்தில், அரியானா அணியின் அதிரடியில் மராட்டிய அணியை 5-1 என வீழ்த்தி வெற்றிபெற்றது. தமிழக அணி, உத்தரபிரதேசத்திடம் 1-3 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. கர்நாடகா, ஒடிசாவிடம் ஷூட்-அவுட் மூலம் தோல்வி அடைந்தது. நாளை நடைபெறும் அரைஇறுதி ஆட்டங்களில், மணிப்பூர்-ஒடிசா மற்றும் அரியானா-உத்தரபிரதேசம் அணிகள் மோதுகின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu