மத்திய அரசு உதவி பிரிவு அதிகாரிகள் 1,592 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு அலுவலகங்களில் பணிபுரியும் உதவி பிரிவு அதிகாரிகள் 1, 592 பேருக்கு பிரிவு அதிகாரிகளாக மொத்தமாக பதவி உயர்வு வழங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், 2 ஆயிரம் உதவி பிரிவு அதிகாரிகளுக்கும், பிற பிரிவு அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு வழங்குவதற்கான பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன. அவர்களுக்கு இந்த ஆண்டு இறுதியில் பதவி உயர்வு அளிக்கப்படும் என மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.














