இந்திய தொழிலாளர்களின் வருகையை அனுமதிக்கும் தொழில் ஒப்பந்தங்களில் இஸ்ரேல்-இந்திய அமைச்சர்கள் கையெழுத்திட்டனர்.
நேற்று இஸ்ரேல் வெளியுறவுத்துறை மந்திரி எலி கோகன், 3 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்தார். டெல்லியில் இரு நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் சந்தித்து பல்வேறு சூழல்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். கூடுதல் நேரடி விமானங்கள் இயக்குவது, வேளாண்மைத்துறை மற்றும் நீர்மேலாண்மை பற்றி விவாதித்தனர். அப்போது கட்டுமானம் மற்றும் நர்சிங் துறைகளில் 42 ஆயிரம் இந்திய தொழிலாளர்களின் வருகையை அனுமதிக்கும் ஒப்பந்தங்களிலும் அமைச்சர்கள் கையெழுத்திட்டனர்.














