ஜெர்மன் தேவாலயத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள் கூட்டத்தின் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இதில், 7 பேர் சம்பவ இடத்திலேயே உயரிழந்தனர்.
ஜெர்மனியின் ஹாம்பர்க் பகுதியில் உள்ள தேவாலயத்தில் ஜெஹோவாவின் சாட்சி மையத்தின் வாராந்திர பைபிள் படிப்பு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, தேவாலயத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள் கூட்டத்தின் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இதில், 7 பேர் சம்பவ இடத்திலேயே உயரிழந்தனர். மேலும் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனால், ஜெர்மனியின் ஹாம்பர்க்கில் மிக ஆபத்துக்கான எச்சரிக்கை மணி ஒலிக்கப்பட்டுள்ளது. மேலும், தேவாலயத்தில் ஒரு மதக் கூட்டம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதால், குடியிருப்பு வாசிகளை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு போலீசார் கேட்டுக் கொண்டனர். ஜெஹோவாவின் சாட்சி மையம் என்பது அகிம்சையைப் பிரசங்கிக்கும் ஒரு அமெரிக்க கிறிஸ்தவ இயக்கம் ஆகும். உயிரிழந்தவர்களில் துப்பாக்கி சூடு நடத்தியவர்களில் ஒருவர் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.