மாணவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு முறைகேடு - அண்ணா பல்கலைக்கழகத்தின் 8 பேராசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு

April 21, 2023

பல்கலைக்கழக தேர்வில் அதிக மதிப்பெண் வழங்குவதாக கூறி மாணவர்களிடம் பணம் வசூலித்து முறை கேட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத்தின் 8 பேராசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் தலைமையில் நடந்த சிண்டிகேட் கூட்டத்தில் அதிரடி நடவடிக்கை எடுத்து இதற்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இந்த 8 பேரில் மதுரை மற்றும் திருச்சி உள்ளிட்ட மண்டல மையங்களில் உள்ள ஆசிரியர்கள், கிண்டி என்ஜினீயரிங் கல்லூரி ஆசிரியர்கள் ஆகியோர் அடங்குவர். மேலும் […]

பல்கலைக்கழக தேர்வில் அதிக மதிப்பெண் வழங்குவதாக கூறி மாணவர்களிடம் பணம் வசூலித்து முறை கேட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத்தின் 8 பேராசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் தலைமையில் நடந்த சிண்டிகேட் கூட்டத்தில் அதிரடி நடவடிக்கை எடுத்து இதற்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இந்த 8 பேரில் மதுரை மற்றும் திருச்சி உள்ளிட்ட மண்டல மையங்களில் உள்ள ஆசிரியர்கள், கிண்டி என்ஜினீயரிங் கல்லூரி ஆசிரியர்கள் ஆகியோர் அடங்குவர். மேலும் மூத்த பேராசிரியர்கள் 3 பேர் பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஓய்வு பெறும்போது பேராசிரியர்களாக மட்டுமே ஓய்வு பெறுவார்கள். முறைகேட்டில் ஈடுபட்ட 8 ஆசிரியர்களும் கடந்த ஜனவரி மாதமே பணி நீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. தற்போது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu