இதுவரை 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கட்டிட இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் அதிபர் தாயீப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
துருக்கியில் நிலநடுக்கத்தின் இடிபாடுகளில இருந்து இதுவரை 8 ஆயிரம் பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் அதிபர் தாயீப் எர்டோகன் தெரிவித்துள்ளார். அங்காரா, துருக்கியின் காசியான்டெப் நகரில் கடந்த 6-ந் தேதி அதிகாலை ரிக்டர் அளவில் 7.8 புள்ளிகளாக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது அங்கு 10-க்கும் மேற்பட்ட மாகாணங்களை உலுக்கியது.
துருக்கியில் 31,974 உயிர்களும், சிரியாவில் 5,800 உயிர்களும் பறிபோனதாக தகவல்கள் கூறுகின்றன. இதுதவிர இருநாடுகளிலும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் படுகாயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. சர்வதேச நாடுகள் அனுப்பிவைத்த மீட்பு குழுக்களின் உதவியுடன் இருநாடுகளிலும் ஒரு வாரத்துக்கும் மேலாக இரவு, பகலாக மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் துருக்கியில் மட்டும் இதுவரை 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கட்டிட இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் அதிபர் தாயீப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.