இமாச்சலபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றுவது உறுதியாகியுள்ளது.
68 தொகுதிகளை கொண்ட இமாச்சபிரதேச சட்டசபைக்கு கடந்த மாதம் 12-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகியவை முக்கிய கட்சிகளாக களமிறங்கின. இன்று வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வந்தது. மொத்தமுள்ள 68 தொகுதிகளில் காங்கிரஸ் 39 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் இமாச்சலபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியமைவது உறுதியாகியுள்ளது.
ஆளும் கட்சியான பாஜக 26 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் இமாச்சலபிரதேசத்தில் பாஜகவின் தோல்வி உறுதியாகியுள்ளது. மேலும், சுயேட்சைகள் 3 பேர் முன்னிலையில் உள்ளனர். 39 இடங்களில் முன்னிலையில் உள்ள காங்கிரஸ் இமாச்சல பிரதேசத்தில் ஆட்சியமைக்க உள்ளது.














