பிறவி இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆரம்பகால சிகிச்சை அளிக்க அப்பல்லோ மருத்துவமனையுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
இதுகுறித்து மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறுகையில், தமிழகத்தில் முதன் முறையாக பிறவி இதய குறைபாட்டு நோய் பதிவேட்டை உருவாக்குவதோடு பிறவியில் இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆரம்ப கால இதய அறுவை சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. இதற்காக சென்னை அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனையுடன் ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது. மேலும் திருநெல்வேலி, மதுரை, சேலம், கோவை, திருவண்ணாமலை, வேலுார் ஆகிய ஆறு அரசு மருத்துவ கல்லுாரிகளில் உள்ள இதய மருத்துவ குழுவினருக்கும், சிறப்பு பயிற்சி கொடுக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.














