பாகிஸ்தான்: ஜிஎஸ்டி வரி 17% ல் இருந்து 18% ஆக உயர்வு

February 17, 2023

கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் பாகிஸ்தானில், சரக்கு மற்றும் சேவை வரி 17% ல் இருந்து 18% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானிய ரூபாயின் மதிப்பை உயர்த்தும் வண்ணம், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜிஎஸ்டி வரி உயர்வால், பாகிஸ்தானில் ஒரு லிட்டர் நெய் மற்றும் சமையல் எண்ணெய் விலையில் 3 முதல் 5 ரூபாய் வரை உயரக்கூடும் என்று கருதப்படுகிறது. இந்நிலையில், கராச்சி துறைமுகத்தில் பல்வேறு காரணங்களுக்காக எண்ணெய் இறக்குமதி நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், […]

கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் பாகிஸ்தானில், சரக்கு மற்றும் சேவை வரி 17% ல் இருந்து 18% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானிய ரூபாயின் மதிப்பை உயர்த்தும் வண்ணம், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஜிஎஸ்டி வரி உயர்வால், பாகிஸ்தானில் ஒரு லிட்டர் நெய் மற்றும் சமையல் எண்ணெய் விலையில் 3 முதல் 5 ரூபாய் வரை உயரக்கூடும் என்று கருதப்படுகிறது. இந்நிலையில், கராச்சி துறைமுகத்தில் பல்வேறு காரணங்களுக்காக எண்ணெய் இறக்குமதி நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், எதிர்வரும் ரம்ஜான் பண்டிகையின் போது, பெட்ரோல், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுடன் சேர்த்து, சமையல் எண்ணெய் விலையும் கடுமையாக உயரக்கூடும் என்று கருதப்படுகிறது.

தற்போதைய நிலவரப்படி, பாகிஸ்தானில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 272 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், டீசல் ஒரு லிட்டர் 280 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மண்ணெண்ணெய் 202.73 ரூபாய்க்கும், டீசல் ஆயில் 196.68 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu