பிரபல உணவு வினியோக நிறுவனமான ஜொமாட்டோ, ஜொமாட்டோ எவ்ரிடே என்ற பெயரில் புதிய வர்த்தகத்தை அறிமுகம் செய்துள்ளது. இது ஜொமாட்டோவின் 10 நிமிட டெலிவரி வர்த்தகத்துக்கு மாற்றாக சொல்லப்பட்டுள்ளது. இந்த புதிய வர்த்தகத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், உணவகங்களுக்கு பதிலாக, வீடுகளில் தயாரிக்கப்படும் உணவுகள் விநியோகிக்கப்படுகின்றன. இதற்காக, ஜொமாட்டோ நிறுவனம், பல சமையல் கலை நிபுணர்களிடம் இணைப்பு பெற்றுள்ளது. மேலும், குறைந்த விலையில் உணவுகளை வழங்க திட்டமிட்டுள்ளது. இதனால், வீடுகளை விட்டு வெளியேறி வசிக்கும் நபர்கள் மிகவும் பயனடைவர் என்று சொல்லப்பட்டுள்ளது.
இந்தியாவில், முதல் கட்டமாக, குர்கோன் நகரின் குறிப்பிட்ட சில பகுதிகளில் ஜொமாட்டோ எவ்ரிடே வர்த்தகம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், உணவின் விலை 89 ரூபாயிலிருந்து தொடங்கப்பட்டுள்ளது. இந்த வர்த்தகத்தின் மூலம், சில நிமிடங்களுக்குள் வீட்டு பாரம்பரியமான உணவுகள் கிடைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் மூலம், வீடுகளை விட்டு வெளியேறி வசிக்கும் நபர்களுக்கு, தினந்தோறும் உணவகங்களில் உண்பதால் ஏற்படும் உடற்கோளாறுகள் குறையும் என்று சொல்லப்பட்டுள்ளது.














