சந்திரசேகரராவிற்கு திடீர் உடல்நல குறைவு

March 13, 2023

சந்திரசேகரராவிற்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவிற்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. இரைப்பை பிரச்சனையால் அவதிப்பட்ட அவரை, அவரது குடும்பத்தினர் ஐதராபாத், கச்சிபவுலியில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு மருத்துவர்கள் பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டனர். சந்திரசேகரராவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் நாகேஸ்வரரெட்டி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் காலையில் வயிற்றில் அசவுகரியமாக இருப்பதாக சந்திரசேகர ராவ் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அவருக்கு சி.டி., எண்டோஸ்கோபி […]

சந்திரசேகரராவிற்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவிற்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. இரைப்பை பிரச்சனையால் அவதிப்பட்ட அவரை, அவரது குடும்பத்தினர் ஐதராபாத், கச்சிபவுலியில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு மருத்துவர்கள் பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டனர். சந்திரசேகரராவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் நாகேஸ்வரரெட்டி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் காலையில் வயிற்றில் அசவுகரியமாக இருப்பதாக சந்திரசேகர ராவ் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அவருக்கு சி.டி., எண்டோஸ்கோபி பரிசோதனைகள் செய்யப்பட்டது.

அவருக்கு அல்சர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அல்சர் பிரச்சினையில் இருந்து சந்திரசேகரராவ் விரைவில் குணமடைவார். மற்ற அனைத்து வகையான சோதனைகளும் இயல்பானவை. அவருக்கு தேவையான மருந்துகளை கொடுத்துள்ளோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் இருந்து சந்திரசேகர ராவ் பிரகதி பவன் சென்றார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu