இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,000ஐ நெருங்கியுள்ளது.
நாட்டில் ஒரே நாளில் 7,830 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,47,76,002 ஆக உள்ளது. கொரோனா பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 16 பேர் உயிரிழந்ததையடுத்து ஒட்டுமொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5,31,016.-ஐ தொட்டுள்ளது. டெல்லி, பஞ்சாப் மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா 2 மரணங்களும் குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஹரியானா மற்றும் உத்தரபிரதேசத்தில் தலா ஒன்றும் கேரளாவில் 5 மரணங்களும் பதிவாகியுள்ளன.














